கும்பகோணம், டிச. 7 –

கும்பகோணம் அருகே பாபநாசம் தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை புதுப்பிக்கக் கோரி, சிஐடியு சார்பில் பிரேதம் போல் அலங்கரித்து பாடை கட்டி நூதன  போராட்டம் நடைபெற்றது.

கும்பகோணம் அருகே பாபநாசம்  அண்ணா சிலையில். சிஐடியு ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கும்பகோணத்திலிருந்து தஞ்சை செல்லும் தேசிய நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக, சேறும் சகதியுமாக உள்ளதால் போக்குவரத்துக்கு பாதிப்பிற்குள்ளாகி இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர்.

இதனை தடுக்கும் வகையில் புதிய தார்சாலை உடனடியாகவும்,  முழுமையாகவும் புதுப்பிக்கக் கோரி , தாரை தப்பட்டையுடன் கொல்லி சட்டி ஏந்தி பாடைகட்டி கட்சி நிர்வாகி ஒருவரை பிரேதம் போல் மாலை போட்டு அலங்கரித்து  கோரிக்கைகளை வலியுறுத்தி  காத்திருப்பு எனும் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சங்கர்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் முரளிதரன், கௌரவத் தலைவர் காதர்உசேன்  ஆட்டோ ஓட்டுனர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here