திருவள்ளூர், மே. 14 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா. மருதுபாண்டி

திருவள்ளூர் மாவட்டம், நடந்து முடிந்த 2024 ஆம் ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கான ரிசல்ட் தமிழகம் முழுவதும் மே-10 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இந்நிலையில் எல்லாபுரம் ஒன்றியத்திற்க்குட்ட 43 பனபாக்கம் கிராமத்தில் வசிக்கும் கூலி விவசாயி முரளி – புனிதா தம்பதியாரின் மகள்  யாமினி லட்சுவாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள லட்சுமி வித்யாலயா மெட்ரிக் குலேஷன் என்ற தனியார் பள்ளியில் பயின்று 500 / 497 மதிப்பெண் பெற்று மாநில அளவில் 3 வது இடமும், மாவட்டம் அளவில் முதலிடமும் பெற்று சாதனை படைத்து பெற்றோருக்கும் படித்த பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் பல்வேறு நலத் திட்ட உதவிகளை செய்து வரும் நிலையில் இவரை பாராட்டும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிறுவனரும் நடிகருமான விஜய் ஆலோசனையின் படி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தலின் படி திருவள்ளுர் மாவட்ட பொருப்பாளர் வழக்கறிஞர் விஜயகுமார் நேரில் சென்று மாணவி யாமினிக்கு சால்வை மற்றும் சந்தன மாலை அணிவித்து வாழ்த்துக்களை கூறினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழக கட்சி நிர்வாகிகள் விமல்  ஃபார்மஸிமகேஷ் பழனி பாஸ்கர் வழக்கறிஞர் மகேஷ் நிதீஷ் ராகுல் அரவிந்த் சதீஷ் உதயம் பிரதாப் தீபக் பழனி ராஜேஷ் அருள் சந்துரு சந்தானம் செல்லமுத்து தாராட்சி ஆர்.வல்லரசு ஏ.வல்லரசு விக்னேஷ் சாய் மற்றும் ஏராளமனோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் மா. மருதுபாண்டி

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here