ஆவடி, டிச. 7 –
ஆவடி அருகே அய்யா வைகுண்டர் சுவாமி அருள்பதி நிழல் தாங்கள் 13 ஆம் ஆண்டு திருஏடு வாசிப்பு திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த சேக்காடு பகுதியில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அருள் பதி திருக்கோவிலில் 13 ஆம் ஆண்டு திரு ஏடு வாசிப்பு திருவிழா சிறப்பான முறையில் கோவில் அறங்காவலர் பற்குணம் தலைமையில் நடைபெற்றது.
இந்த திருஏடு வாசிப்பு திருவிழாவில் கவர பாளையம் ஆஞ்சநேயர் ஆலயத்தில் இருந்து 108 சந்தன குடம் எடுத்து வரப்பட்டு, அய்யா அருள் பதி திருக்கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் செய்தனர். பின்னர், அருளாளர் மாரிமுத்து தலைமையில் கருட சேவை ஊஞ்சல் தாலாட்டு மற்றும் ஆணி வைத்த பாதணி அணிந்து ஆணி வைத்த இருக்கையில் அமர்ந்து ஆலயத்திற்கு வந்த பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார்.
பின்பு கருட சேவையில் வீதி உலா சிறப்பான முறையில் நடைபெற்றதைத் தொடர்ந்து இவ்விழாவில் கலந்துக் கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.