கோவை, ஜன.26 –
கோவை புலியகுளம் பெரியார் சிலை அருகில் திராவிடர் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் இந்திய குடியரசு தினவிழா அணிவகுப்பு பேரணியில் தமிழக அலங்கார ஊர்திகள் கலந்துக்கொள்ள அனுமதி மறுத்தச் செயலைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பெரியார் திராவிடர் கழகத்தின் மாநகர தலைவர் வீரமணி தலைமை தாங்கினார். கோவை மண்டல செயலாளர் சந்திரசேகர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பி. அறிவொளி, எஸ். மாணிக்கம் சக்திவேல் உள்ளிட்டோரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் த.நாகராஜ், தேவராஜ் T. மாரிமுத்து. உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.


















