திருவள்ளூர், மே. 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
திருவள்ளூர் மாவட்டம், பெரிய குப்பம் மேட்டு தெரு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மூங்காத்தம்மன் திருக்கோவிலில் சித்திரை மாதம் ஜாத்திரை திருவிழா நடைப்பெற்றது. அதில் பொதுமக்கள் ஒன்று கூடி அவ்விழாவினை வெகு உற்சாகமாக கொண்டாடினார்கள்.
முன்னதாக சுவாமி ஊர்வலம் பெரிய குப்பம் பகுதியிலிருந்து புறப்பட்டு ஓம் ஸ்ரீ உலகாளும் நாகாத்தம்மன் திருக்கோவில் அருகே அமைந்துள்ள தாய் வீடான முங்காத்தம்மன் திருக்கோவிலில் வைக்கப்பட்டு ஊர்பொதுமக்கள் பொங்கல் இட்டும், மேலும் பத்துக்கு மேற்பட்ட வகையிலான பலகாரங்கள் படையலாகப் படைக்கப்பட்டும் முங்காத்தம்மனுக்கு அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதணைக் காட்டப்பட்டது. பொதுமக்கள் குடும்பம் குடும்பங்களாக வந்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினார்கள்.
அதனைத் தொடர்ந்துஓம் ஸ்ரீ உலகளும் நாகாத்தம்மன் திருக்கோவில் அருள் வாக்கு சித்தர் மதுசூதனன் பொது மக்களுக்கு அருள் வாக்கு கூறப்பட்டு கோவில் பிரசாதம் வழங்கினர். இந்நிகழ்வில் கோவில் நிர்வாகிகளான ஆடலரசன், சிவசங்கர், ராபர்ட், நரேஷ், ஆகாஷ் அயன், ஈஸ்வர், பிரசாந்த், கார்த்திக் மற்றும் ஊர் பொதுமக்கள் என ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.