காஞ்சிபுரம், செப். 5 –
பிரதோஷ நாட்களில் சிவபெருமானின் வாகனமான நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுவது வழக்கம்.
சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷ நாளை சிவபக்தர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வழிபடுவார்கள்.
அதன்படி சனிக்கிழமையான நேற்று காஞ்சிபுரம் ஓரிக்கை மணிமண்டபத்தில் 59 டன் எடையுடன் ஒரே கல்லில் 8 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள நந்தி பெருமானுக்கு பால், தயிர், சந்தனம் மற்றும் வாசனைத் திரவியங்களுடன் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.