காஞ்சிபுரம், ஆக. 27 –

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த களியனூர் கிராமத்தில் வசித்து வருபவர் வரதராஜன் இவரது மனைவி மங்கை லட்சுமி (42) கணவன் மனைவி இருவரும் வாலாஜாபாத் பேரூராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் வழக்கம் போல இன்று காலை பணிக்கு இருவரும் இருசக்கர வானத்தில் சென்று கொண்டிருந்த பொழுது வாலாஜாபாத் அடுத்த ஐயம்பேட்டை பகுதியில் அவர்களுக்கு பின்னால் வந்த தனியார் தொழிற்சாலை பேருந்து பைக் மீது மோதியது. இதில் இருவரும் இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு, கீழே விழுந்தனர். அதில் வண்டியின் பின் அமர்ந்து வந்த வரதராஜனின் மனைவி மங்கை லட்சுமி பேருந்து சக்கரத்தின் அடியில் விழுந்ததில் மங்கை லட்சுமி மீது சக்ரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உடல் நசுங்கி உயிர் இழந்தார். வரதராஜன் சிறு காயங்களுடன் இவ்விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

இவ்விபத்துக் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாலாஜாபாத் காவல்நிலைய போலீசார் இறந்தவரின் உடலைக் கைப்பற்றி  காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு உடல்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இவ்விபத்துக் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here