பாதிரிவேடு, மார்ச். 08 –

திருவள்ளூர் அடுத்ந கும்மிடிப்பூண்டி பாதிரிவேடு காவல் நிலைக்குட்பட்ட பூவளம்பேடு, கே எஸ் சாலையில் உள்ள புறக்காவல் நிலையம் அருகே வங்கி, தங்க நகை கடை, செல்போன் கடை உட்பட முப்பதுக்கு மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு இரவு வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் மாங்கிலால் எனப்படும் நகை அடகு மற்றும் விற்பனை கடையின் பூட்டை உடைத்து பணப்பெட்டியில் இருந்த ரூ. 10,ஆயிரத்தையும் மேலும் கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் ஹார்ட் டிஸ்கையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

அதுப்போன்று, SSS பேன்சி ஸ்டோர் எனும் கடையின் பூட்டை உடைத்து அங்குயிருந்த ரூ. 15,ஆயிரத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். மேலும் தொடர்ந்து அருகாமையில் இருந்த இரண்டு மளிகை கடைகளில் இரும்பு கதவுகளை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து கொள்ளையடித்த மர்ம நபர்கள் கடையில் இருந்த தண்ணீர் டம்ளரை எடுத்துச் சென்று கடையின் பின்புறம் சாவகாசமாக மது அருந்திவிட்டு தப்பி சென்றுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்த தகவலறிந்து அவ்விடத்திற்கு வந்த பாதிரிவேடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாரிமுத்து, உள்ளிட்ட காவல்துறையினர் மோப்பநாய் உதவியுடன் திருட்டு சம்பவம் குறித்த தடயங்களை சேகரிக்கும் பணி மற்றும் விசாரணையையும் மேற்கொண்டு வருகின்றனர். இக்கொள்ளைச் சம்பவம் குறித்து பணம் மற்றும் பொருட்களை பறிக்கொடுத்த அக்கடைகளின் உரிமையாளர்கள் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here