சென்னை, ஜூலை 31,

 

தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் அரசியல் கட்சியினர் மீது போடப்பட்ட அவதூறு வழக்குகளை திரும்ப பெற முதலமைச்சர் உத்திரவிட்டதின் பேரில் அரசாணை வெளியிட்டு அதன் மூலம் 2012 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை போடப்பட்ட அவதூறு வழக்குகளை திரும்ப பெறுவதாக அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.

அச்செய்திக்குறிப்பில் பின் வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது அதன் விவரமாவது, 2012 ஆம் ஆண்டு முதல் 2021 பிப்ரவரி மாதம் வரை அவதூறுப் பேச்சுக்களுக்காக தே.மு.தி.க கட்சியின் தலைவர் விஜயகாந்த், மற்றும் பிரேமலதா விஜயகாந்த், காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், மற்றும் விஜயதரணி, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், அரசியல் பிரமுகர்கள் பழ.கருப்பையா, மற்றும் நாஞ்சில் சம்பத், அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேசன், கணேசன் ( ஆர்.எஸ்.ஒய்.எஃப் ) திமுக வைச் சேர்ந்த கே.என்.நேரு மற்றும் எஸ்.எம்.நாசர், பாரளுமன்ற உறுப்பினர்கள் எம்.கே.கனிமொழி, தயாநிதிமாறன், ஆர்.எஸ்.பாரதி, எஸ்.ஆர்.பார்த்திபன், மற்றும் திமுக தலைமைக்கழக பேச்சாளர்கள் ஆகியோர் மீது சுமார் 130 அவதூறு வழக்குகள் போடப்பட்டிருந்தன அரசியல் கட்சி பிரமுகர்கள் மீது தொடரப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளையும் திரும்ப பெறவும் அதன் மீதான அனைத்து மேல் நடவடிக்கைகளையும் கைவிடவும் முதலமைச்சர் ஆணைப் பிறப்பித்துள்ளரார் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here