திருவண்ணாமலை, டிச. 13 –

செய்தித் தொகுப்பு: செ.ஆசைத்தம்பி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திருவண்ணாமலை மாவட்டம்.

ஏழை, எளிய மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி மாற்றுத் திறனாளிகள் பயன் பெறும் வகையில் பல்வேறு சிறப்பான நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் –
திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த திட்டத்தின் மூலம்  பயனடைந்த பயனாளிகள் மனம் நெகிழ்ந்து நன்றியை தெரிவித்துள்ளனர்.

மாற்றுத் திறனாளிகளை மனித சமுதாயத்தின் ஓர் அங்கமாக அங்கீகரித்து, நாட்டின்  வளர்ச்சியில் மாற்றுத் திறாளிகளின் பங்கேற்பினை உறுதி செய்யும் வகையில் ஏனைய மக்களுக்கு இணையாக மாற்றுத் திறனாளிகளும் வாழ்ந்திட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, தமிழக மக்களின் நலனுக்காக ஏராளமான நலத்திட்டங்களை இந்தியாவிற்கே வழிகாட்டும் வகையில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

மாற்றுத்திறன் கொண்ட  கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் ஊக்கத் தொகைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு, கடுமையாகபாதிக்கப்பட்ட, தசைசிதைவு நோய் மற்றும் மனவளர்ச்சி குன்றியோருக்கு சிறப்பு இல்லங்கள், பேருந்து பயணச்சலுகை, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் அனைவரும் அரசுப்பேருந்துகளில் சென்று வர கட்டணமில்லா பயணச்சலுகை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் சிறப்பு மானியம் வழங்குதல், மாற்றுத்திறனாளிகளுக்கு 2 கால்களும் பாதிக்கப்பட்டு உயர்கல்வி பயிலும் அல்லது சுயதொழில் அல்லது பணிபுரியும் மாற்றுதிறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர், செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கு நவீன காதொலி கருவிகள், பார்வைத் திறன் குறைபாடுகள் உடைய  மாணவர்களுக்கு  எமுத்தை பெரிதாக்கி சுயமாக படிக்க உதவும் கருவிகள், மூளை முடக்கு வதாத்தால் பாதிக்கப்பட்ட  மாற்றுதிறனாளிகளுக்கு சிறப்பு சக்கர நாற்காலி, கால் மற்றும் கைகளை இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செயற்கை அவயங்கள், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் எளிதில் நடப்பதற்கு உதவியாக ஒளிரும் மடக்குச் குச்சிகள், மாற்றுத்திறனாளிகளும் சுயமாக வருவாய் ஈட்டிட மோட்டார் பொருந்திய நவீன தையல் இயந்திரங்கள் மற்றும் உதவி உபகரணங்கள் போன்ற எண்ணற்ற திட்டங்களை பெற்று தமிழகத்தில் மாற்றத்திறனாளிகள் தன்னிகரில்லா வளர்ச்சியைப் பெறவும், மேலும், தமிழக சட்டமன்ற பேரவையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் இன்னபிற பல்வேறு சிறப்பான திட்டங்களை அறிவித்தும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையில் ஒளி ஏற்றி வருகிறார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திருக்கோயில்கள் மற்றும் கோவில்களுக்கு சொந்தமான திருமண மண்டபங்களில் இலவசமாக திருமணம் நடத்தும் திட்டத்தினை 08.12.2021 அன்று தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து, 10.12.2021 அன்று திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில், திருவண்ணாமலையைச் சேர்ந்த திரு.ஆர்.ரவிச்சந்திரன் என்ற மணமகனுக்கும், திருப்பத்தூர் மாவட்டம் திம்மசமுத்திரத்தை சேர்ந்த டி.ஆர்.சித்ரா என்ற மணமகளுக்கும் திருமணத்திற்கான கட்டணம் வசூலிக்கப்படாமல் இலவசமாக திருமணம் நடைபெற்றது. இவர்களில் மணமகள் டி.ஆர்.சித்ரா மாற்றுத்திறனாளி ஆவார். திருக்கோயிலின் சார்பாக மணமக்களுக்கு இலவசமாக வேஷ்டி-சேலை மற்றும்; பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்றது முதல் இதுவரை மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில 35 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரு.76,500 மதிப்பில் மொத்தம் ரூ.26.77 இலட்சம் மதிப்பீட்டில்  இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரும், 7,188 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.12.94 கோடி மதிப்பீட்டில் மனவளர்ச்சி குன்றியோருக்கான பராமரிப்பு உதவித்தொகையும், 821 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.48 கோடி மதிப்பீட்டில் கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகையும், 138 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.24.84 இலட்சம் மதிப்பீட்டில் தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு உதவித்தொiயும், 317 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.57.06 இலட்சம் மதிப்பீட்டில் தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு உதவித்தொகையும், 118  மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.21.24 இலட்சம் மதிப்பீட்டில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு உதவித்தொகையும், 25 பயனாளிகளுக்கு ரூ.3.00 இலட்சம் மதிப்பீட்டில் அதிக உதவி தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் தங்களுடன் ஒரு உதவியாளரை வைத்துக் கொள்ள ஏதுவாக அவர்களுக்கு மாதந்திர உதவித்தொகையும், 20 மாற்றுத்திறனளாளிகளுக்கு ரூ.20.00 இலட்சம் மதிப்பீட்டில் சிறு மற்றும் குறு தொழில் சுய வேலைவாய்புத் திட்டம், 909 மாற்றுத்திறனளாளிகளுக்கு ரூ.29.07 இலட்சம் மதிப்பீட்டில் கல்வி பயிலும் மாற்றுத் திறன்வுடைய மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையும், 58 மாற்றுத்திறனளாளிகளுக்கு ரூ.1.58 இலட்சம் மதிப்பீட்டில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான வாசிப்பாளர் உதவித்தொகையும் வழங்கப்பட்டது.

மேலும், 24 மாற்றுத்திறனளாளிகளுக்கு ரூ.1.51 இலட்சம் மதிப்பீட்டில் மோட்டர் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் 26 மாற்றுத் திறனளாளிகளுக்கு ரூ.1.27 இலட்சம் மதிப்பீட்டில் மடக்கு சக்கர நாற்காலியும், 7 மாற்றுத் திறனளாளிகளுக்கு ரூ.7350ஃ- மதிப்பீல் வாக்காரும், 18 மாற்றுத் திறனளாளிகளுக்கு ரூ.63900ஃ- பார்வையற்றோருக்கான ஒளிரும் மடக்குயும், 18 மாற்றுத் திறனளாளிகளுக்கு ரூ.1800ஃ- கருப்பு கண்ணாடியும், 15 மாற்றுத் திறனளாளிகளுக்கு ரூ.96000ஃ- மூன்று சக்கர சைக்கிளும், 8 மாற்றுத் திறனளாளிகளுக்கு ரூ.5920ஃ- காதொலி கருவியும், 15 மாற்றுத் திறனளாளிகளுக்கு ரூ.8100ஃ- மதிப்பில் எல்போ ஊன்றுகோலும், 2 மாற்றுத் திறனளாளிகளுக்கு ரூ.60000ஃ- மதிப்பீல் செயற்கை கால்களும், 10 மாற்றுத் திறனளாளிகளுக்கு ரூ.5400ஃ- மதிப்பீல் ஊன்று கோலும், 16 மாற்றுத் திறனளாளிகளுக்கு ரூ.8100ஃ- மதிப்பீட்டில் ரொலட்டரும், 16 மாற்றுத் திறனளாளிகளுக்கு ரூ.1.24 இலட்ச மதிப்பீட்டில் ழூளை முடக்கு வாதத்ததால் பாதிக்கப் பட்டோருக்கான சிறப்பு சக்கர நாற்காலிகளும், 6 மாற்றுத் திறனளாளிகளுக்கு ரூ.5.99 இலட்ச மதிப்பீட்டில் தசைச்சிதைவு நோய் மற்றும் முதுகு தண்டுவடத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு பேட்டரி பொருத்திய நகரும் வண்டிகள் ஆக மொத்தம்; 9810 பயனாளிகளுக்கு ரூ.16,37,77,924 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத் திறனாளிகள் நலம் காத்திடவும், கல்வி, வேலைவாய்ப்பில் வளர்ச்சிக்கான மகத்தான நல்ல திட்டங்களை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின் படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பான முறையில்  இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆடையூர் கிராமத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளியான திரு.செ.ஏழுமலை, தஃபெ.செல்வராஜ் என்பவர் தெரிவித்ததாவது,

நான் தண்டராம்பட்டில் உள்ள சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன். எனது சொந்த கிராமமான ஆடையூரில் இருந்து பள்ளிக்கும், வெளியிடங்களுக்கும் செல்ல மிகவும் சிரமமாக இருந்தது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற்றேன். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்; கேட்டு விண்ணப்பத்திருந்தேன். குறுகிய காலத்தில் எனக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் விலையில்லா ஸ்கூட்டர் வாகனத்தை பெற்றேன். தற்போது எனது பணிக்கும் எனது சொந்த தேவைக்கும் வெளியில் சென்று வர இவ்வாகனம் உதவியாக இருக்கிறது. மாற்றுத்திறனாளியான எனது வாழ்வில் ஒளியேற்றி, தன்னம்பிக்கை வளர்த்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
திருவண்ணாமலை மாவட்டம், சிறுகிளாம்பாடி கிராமத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளியான திருமதி.எஸ்.கலைவாணி, என்பவர் தெரிவித்ததாவது,

என்னுடைய இரண்டு குழந்தைகளும் மாற்றுத்திறனாளிகள். அவர்களின் வாழ்வை மேம்படுத்த, தையல் பயிற்சி கற்றுக்கொண்டு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் தையல் இயந்திரம் வேண்டி, விண்ணப்பத்திருந்தேன். எனது கோரிக்கையை கனிவுடன் உடனடியாக பரிசீலித்து தையல் இயந்திரம் வழங்கினார்கள். முன்பை விட என் குடும்பம் இப்போது நல்ல நிலையில் உள்ளது. தையல் இயந்திரத்தின் மூலம் வரும் வருவாயை ஈட்டி எனது குழந்தைகளை கவனத்து கொள்கிறேன். என்னை போன்ற மாற்றுத்திறனாளி குழந்தைகளை வைத்திருக்கும் தாய்மார்களும் இந்த சிறப்பான நலத்திட்டங்களை  பெற்று பயனடைய வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்களை ஏற்படுத்தி தந்ததற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் மிக பெரிய மாற்றத்தை உண்டாக்குகின்ற வகையில் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி, எண்ணற்ற திட்டங்களை அறிந்து செயல்ப்படுத்தி வருகிறார்.  இதுபோன்ற மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் விளக்கேற்றி அவர்களின் வருங்கால சந்ததியினரையும் பாதுகாத்து வாழ்வில் முன்னேற்றம் அடைய தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் உருவாக்கி தந்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட பயனாளிகள் என்றென்றும் நன்றிக்கடன் பட்டவர்களாக இருப்பார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here