சென்னை:

ஆசிய கோப்பை கிளப் கால்பந்து போட்டியின் தகுதி சுற்றுக்கான ‘பிளே-ஆப்’ ஆட்டத்தில் ஐ.எஸ்.எல். போட்டியில் 2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி, கொழும்பு எப்.சி.(இலங்கை) அணியுடன் மோதுகிறது. இதில் முதல் ஆட்டம் கொழும்பில் வருகிற 6-ந் தேதியும், 2-வது ஆட்டம் ஆமதாபாத்தில் வருகிற 13-ந் தேதியும் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான சென்னையின் எப்.சி. அணி நேற்று அறிவிக்கப்பட்டது. காயம் காரணமாக இந்த ஐ.எஸ்.எல். சீசனில் விளையாடாத சென்னையை சேர்ந்த தனபால் கணேஷ் அணியில் இடம் பிடித்துள்ளார். சென்னையின் எப்.சி. அணி வீரர்கள் வருமாறு:

கரன்ஜித் சிங், சஞ்ஜிவன் கோஷ், நிகில் பெர்னட் (கோல் கீப்பர்கள்), மெயில்சன் ஆல்வ்ஸ், எல் சபியா, ஜோமிங் ரியானாலால்ட், லால்ரிங்ஜூலா, ரென்த்லே, டான்டோன்பா சிங், ஹென்றி அந்தோணி, ரியாம்சோசங் (பின்களம்), கிறிஸ் ஹெர்ட், அனிருத் தபா, ஜெர்மன் பிரீத்சிங், தனபால் கணேஷ், ரபெல் அகஸ்டோ, தோய்சிங், பிரான்சிஸ்கோ பெர்னாண்டஸ், ஐசக் வன்மல்சாவ்மா, ஹலிசரண் நார்ஜரி, ஜோனுன் மாவி (நடுகளம்), ஜெஜெ லால்பெகுலா, சி.கே..வினித், முகமது ரபி, ரோமிங் தங்கா (முன்களம்).

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here