செங்கல்பட்டு, மே. 12 –
செங்கல்பட்டில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் நேற்று, தமிழ்நாடு சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், ஆய்வு மேற்கொண்டார். அதனை அடுத்து தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் அங்கு புதிதாக சுமார் ரூ. 22 லட்சம் மதிப்பிலான பேக்கரி பொருட்களை தயாரிக்கும் தொழில் கூடத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.
மேலும் இத்தொழிற்கூடத்தில், பல்வேறு வகையான பிஸ்கட்ஸ், பன் ,கேக், வர்க்கி, ஆகியவை தயாரிக்கப்பட உள்ளன. இதில் தொழில் பயிற்சி அளிப்பதற்கு ஏற்கனவே சிறார் கூர்நோக்கி இல்லத்தில் பயிற்சிப் பெற்ற மாணவர்கள் பயிற்சி அளிக்க உள்ளார்.
இந்நிகழ்ச்சியில் உரை நிகழ்த்திய அமைச்சர் கீதாஜீவன், இப்பேக்கரியில் விருப்பத்தின் பெயரில் , பயிற்சி எடுத்து பொருட்களை தயாரித்துக் கொடுக்கும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.
மேலும் தற்போதைய அரசு, குழந்தை நேய அரசாக இருக்க வேண்டும் என்ற தமிழக முதலமைச்சரின் உத்தரவின் படி இந்த துறைக்கு ரூ. 27 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. என்றார்.
மேலும், இத்துறை சார்பாக, மாணவர்களுக்கு பல்வேறு விருப்பங்கள் இருக்கும் அவற்றை நிறைவேற்றுவதற்காக, விளையாட்டு மைதானங்கள் அமைப்பது, இசை கற்கும் பயிற்சி, ஓவியம் வரையக் கற்றுக் கொடுப்பது, போன்ற உங்களோன் பல்வேறு விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை இவ்வரசு மேற்கொண்டு வருகிறதென அப்போது தெரிவித்தார்.
தொடர்ந்து அமைச்சர் உரை நிகழ்த்தும் போது, குழந்தையின் நலனுக்காக, சுமார் ரூ. 22 லட்சம் மதிப்பிலான இப்பேக்கரியை அமைத்து தந்துள்ள இந்நிறுவனத்திற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக அப்போது தெரிவித்தார்.
இந்நிகழ்வின் தொடர்ச்சியாக, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், கூர்நோக்கு இல்லங்களை காலத்திற்கு ஏற்ப தரம் உயர்த்துவதற்காக, தொழிற்பயிற்சி, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு பணிகள் கொடுப்பதற்கு, ஒரு நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது எனவும், மேலும் அக்குழு நீதிபதி சந்துரு தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது என்றார். மேலும் அக்குழு மூன்று மாதத்தில் இது தொடர்பான அறிக்கையை தர உள்ளதெனவும் அப்போது அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.



















