சென்னை, மார்ச். 02 –

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள செய்தியில் நெருக்கடி மிகுந்த இந்நேரத்தில் உக்ரைனில் சிக்கியுள்ள நமது மாணவர்கள் தம்மைத்தாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலையில் தவிக்க விடப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் வேதனையளிக்கின்றன. போர்த்தாக்குதல்களையும் எல்லைப்பகுதியில் எதிர்ப்பையும் நமது மாணவர்கள் சந்தித்து வரும் நிலையில் ஒன்றிய அரசு அவர்களை குற்றங் கூறுவதை நிறுத்திக்கொண்டு அவர்களை விரைவாக மீட்பதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும், இந்தியக் கடவுச்சீட்டை பெற்றுள்ள இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவரையும் பாதுகாக்க வேண்டியது இந்திய அரசின் பொறுப்பாகும். மேலும் இந்திய பிரதமர் தமது அமைச்சரவையைச் சேர்ந்தவர்கள் தேவையற்ற கருத்துக்களை வெளியிடுவதைத் தடுத்து இந்தியர்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பதிவில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here