பெரியபாளையம், மார்ச். 03 –
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட பஜார் தெருவில் வசிக்கும் குமார் என்பவரின் மகன் சார்லஸ் வயது 28 இவர் அப்பகுதியில் பூ மாலைக்கட்டும் வேலை பார்த்து வருகிறார்.
சம்பவ நாளான நேற்று மார்ச் 2 ஆம் தேதி பெரியப்பளையத்தில் உள்ள தண்டுமா நகரில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நடந்த மயானக்கொள்ளை விழாவைப் பார்வையிடுவதற்காக அவரது நண்பர் சிவக்குமாருடன் சென்று, மதியம் 2 மணியளவில் அப்பகுதியில் உள்ள பெருமாள் கோவில் தெரு அருகில் நின்று கொண்டுயிருந்த போது, அவருக்கு பழக்கமே இல்லாத அதேப்பகுதியைச் சேர்ந்த விஜிக்குட்டி என்ற சஞ்சய் டியோ எனும் இரு சக்கர வாகனத்தில் வந்தவர் அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து எந்தவிதக் காரணமும் இல்லாமல் அசிங்கமான முறையில் திட்டி நீதான் எனக்கு ஸ்கெட்ச் போடுகிறாயா ? என கூறியபடி நீ இன்றோடு செத்தாய் எனக்கூறி அவர் கையில் வைத்திருந்த கத்தியால் தலையில் ஓங்கி வெட்டியுள்ளார். அதிலிருந்து தப்பிக்க சார்லஸ் தனது கைகளால் தடுத்தபோது, இடது கையிலும் வெட்டியுள்ளார். பயத்தில் சார்லஸ் அலரிக் கத்தவே, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சார்லஸ் அலரல் சத்தம் கேட்டு அங்கு வருவதைப் பார்த்த விஜிக்குட்டி மீண்டும் சார்லஸைப் பார்த்து உனைத் துண்டு துண்டாக வெட்டிவிடுவேன் எனக்கூறி அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்.
வெட்டுப்பட்ட சார்லஸை பொதுமக்கள் பெரியப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் முதலுதவி அளித்து அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் அங்கு அவர் அனுமதிக்கப்பட்டு உள் நோயாளியாக இருந்து சிகிச்சைப் பெற்று வருகிறார்.
மேற்கண்டவாறு தனது புகார் மனுவில் சார்லஸ் பெரியப்பாளையம் காவல் நிலையத்தில் அளித்துள்ள தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார். மேலும் அப்புகார் மனுவில் அறிமுகம் மற்றும் காரணமே இல்லாமல் தன்னை கத்தியால் தாக்கியவர் மீது உரிய சட்டநடவடிக்கை மேற்கொள்ளும் படி தெரிவித்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில் பெரியபாளையம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து பெரியபாளையம், தண்டுமா நகர் பகுதியில் வசிக்கும் தென்றல் என்பவரின் மகன் விஜிக்குட்டி என்ற சஞ்சய் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.





















