பொன்னேரி, ஜூலை. 31 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அரசு பேருந்து நிலைய பணிமனையின் திமுக சார்பில் தொழிலாளர் முன்னேற்ற சங்க ஒட்டுநர் பொதுக்குழு உறுப்பினருக்கான தேர்தல் நடைபெற்றது.
இத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு போக்குவரத்து பணிமனைக்கு எதிரே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேர்தல் ஆணையர் கோ.சி.வள்ளுவன் தலைமையிலும், தேர்தல் அலுவலர் பி.எஸ்.கார்த்திகேயன் முன்னிலையிலும் நடைப்பெற்றது.
இதில் பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கு எம். கருணாநிதி, ஜி விக்டர் செபஸ்டின், ஆகியோர் போட்டியிட்டனர். இதில் எம்.கருணாநிதி விக்டர் செபஸ்டினை விட மூன்று வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.
அதனைத் தொடர்ந்து, தேர்தல் அலுவலர் கார்த்திகேயன் அத் தேர்தலில் வெற்றிப்பெற்ற எம்.கருணாநிதிக்கு, வெற்றிக்கான சான்றிதழை வழங்கினார். இந்நிகழ்வின் போது தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.





















