மீஞ்சூர், ஆக. 03 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட மீஞ்சூரில் உள்ள அரசு பள்ளியிலும் மற்றும் சகாய மாதா மகளீர் மேல்நிலை பள்ளியிலும் இன்று கலைஞர் மகளிர் உரிமை திட்ட முகாம் நடைபெற்றது.
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் மாதம் ஆயிரம் ரூபாய் மகளிருக்கு வழங்கப்படும் என்ற திட்டம் செயல் படுத்தப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பின்படி அதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு அதனை தகுந்த பயனாளிகள் பூர்த்தி செய்து அரசு நடத்திடும் சிறப்பு முகாம்களில் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் இம்மாவட்டத்தில் இன்று நடைப்பெற்று வரும் சிறப்பு முகாம்களுக்கு நேரில் சென்று அங்கு தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆய்வு மேற்கொண்டார்.
அதன் தொடர்ச்சியாக பொன்னேரி தொகுதிக்குட்பட்ட மீஞ்சூர் பகுதியில் இருவேறு இடங்களில் நடைப்பெற்ற சிறப்பு முகாம்களுக்கு அமைச்சர் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார். உடன் அமைச்சருடன் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் இருந்தார்.
மேலும் இவ்வாய்வின் போது, திமுகாவின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி ஜே கோவிந்தராஜன், மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் வல்லூர் எம். எஸ். கே. ரமேஷ்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் பா.செ. குணசேகரன், மீஞ்சூர் பேரூர் நகரச் செயலாளர் கா.சு. தமிழ் உதயன் மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ், துணைத்தலைவர் அலெக்சாண்டர், பொன்னேரி வட்டாட்சியர் செல்வகுமார், மீஞ்சூர் பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றிஅரசு மற்றும் மீஞ்சூர் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் உள்ளிட்டவர்களும், திமுக நிர்வாகிகள் அரசு துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர். அதனைத் தொடர்ந்து முகாமில் திரளாக இருந்த பெண்களிடம் இத்திட்டத்தின் நிறைக்குறை மற்றும் பலன் குறித்து கேட்டறிந்தார்.





















