கும்பகோணம், பிப். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயிலில் வளர்ந்து வரும் மங்கலம் எனும் யானைக்கு, ஆன் ஆக்டிவ் எலிபன்ட்’ எனும் விருதினை டெல்லி லோத் தந்திரா ஜன்தா சார்பில் வழங்கும் நிகழ்வு நடைப்பெற்றது. மேலும் அவ் விருதினை யானை பராமரிப்பாளர் அசோகனிடம் அப்போது அவர்கள் வழங்கினார்கள்.
கும்பகோணம் மாநகரத்தில் 2000 ஆண்டுகள் பழமையான அருள்மிகு ஆதி கும்பேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. மேலும் இத்திருத்தலத்திற்கு தமிழ்நாட்டில் உள்ள உள்ளூர், வெளியூர், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினசரி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் இத்திருக்கோவிலில் வளர்ந்து வரும் 56 வயதுடைய யானை மங்களம் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்குவது, மற்றும் அத்திருக்கோயிலில் நடைப்பெறும் சிறப்பு தினங்கள் உள்ளிட்ட விழாக் காலங்களில் அதன் இறை சேவை அளப்பரியா வகையில் அமைந்து வருகிறது.
மேலும் அனைத்து விழாக்களுக்கும் யானையின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது. அனைத்து விழாக்களிலும் யானைக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. இந்த யானை கோவிலில் நடக்கும் பூஜைகளில் பங்கேற்று சுவாமிக்கு இறைப்பணியாற்றி வருகிறது. குழந்தை போல் பழகும் குணம் கொண்டது அவ் யானை என அனைவராலும் தெரிவிக்கப்படுகிறது.
56 வயதுடைய அவ் யானை அத்திருக்கோயில் நிர்வாகம் சார்பில் மிகுந்த சிற்புக் கவனம் செலுத்தி பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் யானை மங்கலம் மிகவும் சுட்டித்தனம் வாய்ந்தது. என அதனை பராமரித்து வரும் நானைப் பாகன் உள்ளிட்ட பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் யானை பாகன்களுடன் குறும்புத்தனம் செய்யும் பல வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது பரவி பெரும் வரவேற்பு பெற்று வந்துள்ளது.
இந்நிலையில் டெல்லி தன்னார்வ தொண்டு நிறுவன லோத் தந்திரா அவுர் ஜன்தா சார்பில் தமிழக திருக்கோயிலில் வளர்க்கப்பட்டு வரும் 38 யானைகளின் பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்தனர். அதில் கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயில் யானை மங்கலம் சிறந்த முறையில் பராமரிப்பு செய்த பணிக்காக ஆன் ஆக்டிவ் எலிபன்ட் என்ற சிறப்பு விருது வழங்கப்பட்டது.
இதனையடுத்து தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் சுதன் பாலன், அஜீத் குமார் ஆகியோர் யானை மங்கலம் பராமரிப்பாளர் அசோக்கிடம் நினைவு பரிசு மற்றும் விருதுகளை வழங்கினர். நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணகுமார், மற்றும் பணியாளர்கள் பக்தர்கள் பலர் உடன் இருந்தனர்.






















