மீஞ்சூர், டிச. 26 –

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த கேசவபுரம் பகுதியில் வசித்து வருபவர் சாய் கிரண் தனியார் தொழிற்சாலையில் பணிப் புரிந்து வருகிறார். அவரது மனைவி சுகன்யா வயது (30) இவர் தினமும் அதிகாலையில் நடை பயிற்சி மேற்கொள்வது வழக்கமாக கொண்டு வந்துள்ளார். அதுப் போன்று நேற்று காலை நடைப் பயிற்சியில் ஈடுபடும் போது அப்பகுதியில் சுற்றித் திரிந்துக் கொண்ட எட்டு தெரு நாய்கள் இவரை வழிமறித்து கடித்ததின் பேரில் பலத்த காயங்கள் ஏற்பட்டு மீஞ்சூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்தெரு நாய்க்கள் கடித்ததில், சுகன்யாவின் கை கால் முகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார், இதுக் குறித்து சுகன்யாவின் கணவர் சாய் கிரண் அப்பகுதியில் திரளான தெருநாய்கள் சுற்றி வருவதாகவும், மேலும் அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த அவசியம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here