பழவேற்காடு, ஜன. 19 –

தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி …

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு சிகிச்சை வழங்கிடும் வகையில் அப்பகுதியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

மேலும் நாள்தோறும் அம்மருத்துவமனைக்கு நூற்றுக்கணக்கான புற நோயாளிகள் சிகிச்சைக்காக வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் தற்போது அம்மருத்துவமனையில் போதிய அளவில் மருத்துவர்கள் இல்லை எனவும் அதனால் அங்குப் பணியுரியும் செவிலியர்களே பெரும்பாலும் நோயளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும், மேலும் அவர்கள் அளிக்கும் சிகிச்சையால் நோய் விரைவில் குணமடைவதில்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதனைத் தொடர்ந்து தொடர் சிகிச்சைக்காக பொன்னேரி மற்றும் சென்னை அரசு மருத்துவமனைகளுக்கு நோயாளிகளை அனுப்பி வைக்கப்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர். அதனால் நோயாளிகளின் இறப்பு சதவீதம் அதிகரிப்பதாக குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் அங்கிருக்கும் சொற்ப அளவிலான மருத்துவர்களும் இரவு நேரங்களில் சரிவர மருத்துவமனைக்கு வருவதில்லை எனவும் அதனால் சிறுவர்கள், மகளிர் உள்ளிட்ட பெரியவர்கள் வரை தினசரி சிகிச்சைக்கு வரும் அவர்களுக்கு சரியான விதத்தில் மருத்துவச்சிகிச்சைக் கிடைக்காமல் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாவதாக அவர்கள் தொடர் குற்றச்சாட்டுகளை விடுக்கின்றனர்.

மேலும் மருத்துவர் இருக்கையில் அமர்ந்து செவிலியர்களே சிகிச்சை பார்த்து வரும் அவலமும் அரங்கேறி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அப்பகுதி மக்கள் தெரிவிக்கும் அடுக்கடுக்கான புகார்கள் மீது மாவட்ட சுகாதாரத்துறை உயர் அலுவலர்கள் பழவேற்காடு அரசு மருத்துவமனையில் உரிய ஆய்வு நடத்தி உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அப்பகுதி வாழ் மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here