தஞ்சாவூர், பிப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சைவூர் தமிழ்வேள் உமா மகேஷ்வரனார் கரந்தை கலை கல்லூரியில் “தமிழ்நாட்டுத் தொல்லியல் தடங்கல்” என்கிற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
அக்கருத்தரங்கில் வரலாற்று ஆய்வாளர்கள் பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதில் பண்டைய கால மக்களின் வாழ்க்கை முறை, அவர்கள் நாகரீகம் குறித்து மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும் அவர்கள் அதனை அறிந்து கொள்ளும் வகையில் ஒரு நாள் கண்காட்சி நடைபெற்றது.
அதில் பண்டைய கால நாணயங்கள், அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், போர் கருவிகள் உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன. இந்த கண்காட்சியை பள்ளி மாணவ மாணவிகள், கல்லூரி மாணவ மாணவிகள் என திரளாக வந்திருந்து ஆர்வத்துடன் கலந்து கொண்டு ரசித்து தொல்லியியல் துறையின் அவசியம் குறித்து உணர்ந்தனர்.




















