கும்பகோணத்தில் கணவர் இறந்தச் செய்தியை மனைவிக்கே தெரிவிக்காத தால் மாமியார் வீட்டு முன் கை குழந்தை மற்றும் உறவினர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்ட மருமகள் இதனால் சற்று நேரம் அப்பகுதியில் பர பரப்பு நிலவியது.
செய்தி சேகரிப்பு ரமேஷ்
கும்பகோணம், செப். 3 –
கும்பகோணம் பாலாஜி நகர் விரிவாக்கம் பகுதியில் வசித்து வருபவர் மணியன் அவரது மகன் சரவணன் (வயது 38) இவருக்கும் திருவிடைமருதூரை அடுத்த பாலூரைச் சேர்ந்த திவ்யா என்பவருக்கும் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இதனிடையே கணவன் மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர்.
இந்த நிலையில் சரவணன் கடந்த 2019ஆம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த சியாமளாதேவி (24) என்பவரை 2-வதாக திருமணம் செய்து உள்ளார். அதனைத் தொடர்ந்து சியாமளா தேவி பிரசவத்திற்காக சென்னையில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு கடந்த 10 மாதம் முன்பு குழந்தை பிறந்த பின்பும் குழந்தையுடன் அவரது தாயார் வீட்டிலேயே வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த மே மாதம் பாலாஜி நகர் விரிவாக்கப் பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்த சரவணனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு தஞ்சையில் சிகிச்சை பெற்று வந்த சரவணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இத் தகவலை சரவணன் பெற்றோர்கள் சியாமளா தேவிக்கு தெரிவிக்காமலேயே இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் சரவணன் இறந்த தகவல் கடந்த மாதம் சியாமளா தேவிக்கு தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சியாமளாதேவி அவரது தாய் மஞ்சுளா ஆகியோர் கும்பகோணம் வந்து சரவணன் இறந்த செய்தியை ஏன் தெரிவிக்கவில்லை என சரவணனின் பெற்றோரிடம் முறையிட்டுள்ளனர். அதற்கு சரவணனின் பெற்றோர் உரிய பதில் தராததால் இது குறித்து கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சியாமளா தேவி புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில்,
இன்று மதியம் சியாமளாதேவி, அவரது தாய் மஞ்சுளா மற்றும் அவரது உறவினர்கள் சுமார் 10க்கும் மேற்பட்டோர் சரவணன் வீட்டிற்கு வந்து அவரது பெற்றோர்களிடம் சரவணனுக்கு முதல் திருமணம் நடந்து விவாகரத்து ஆனதை மறைத்து இரண்டாவதாக சியாமளா தேவியை திருமணம் செய்து வைத்ததாக கூறியும், சரவணன் இறந்த தகவலை தெரிவிக்காமல் மறைத்ததை கண்டித்தும், சரவணனை இழந்து தவிக்கும் சியாமளா தேவி மற்றும் அவரது குழந்தை ஆகியோருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி சரவணன் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த கும்பகோணம் தாலுகா காவல் நிலையம் உதவி ஆய்வாளர் மோகன் மற்றும் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.