தேனி:
தேனி அருகே உள்ள கொடுவிலார் பட்டியில் இயங்கி வரும் கம்மவார் சங்க பாலிடெக்கினிக் கல்லூரியின் 12-ம் ஆண்டு விழா மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைப் பெற்றது.
அதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்ட தேனி மாவட்ட விளையாட்டுத் துறை அலுவலர் கா. சுப்புராஜ் கல்வி,மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். கல்லூரியின் ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் உள் அரங்கத்தில் நடைபெற்றது.
மின்வாரிய பொறியாளர் திருமதி உமாவதி சிறப்புரை ஆற்றினார். இந் நிகழ்ச்சிக்கு, தேனி கம்மவார் சங்கத்தின் பொதுச் செயலாளர் பொண்ணுச்சாமி தலைமை தாங்கி விழாவை தொடங்கி வைத்தார்.
மேலும் விழாவில் கல்லூரியின் செயலாளர் சீனிவாசன் பொருளாளர் தாமரை கண்ணன், கல்லூரியின் முதல்வர் முனைவர் தர்மலிங்கம் ஆகியோர் நன்றிவுரை மற்றும் வாழ்த்துரை வழங்கினர். பெரும் திரளாக பல்வேறு போட்டிகளில் மாணவர்களும் மாணவிகளும் கலந்து கொண்டு தங்கள் தனித்திறன் மற்றும் கூட்டுத் திறனை வெளிப்படுத்தியது, ஆசிரியர்களிடையும்,இவ்விழாவில் கலந்துக் கொண்ட பெற்றோர்கள் மத்தியிலும் பெரும் வியப்பையும், பாராட்டையும் பெற்றது .