pic file copy

ஊத்துக்கோட்டை, மார்ச். 04 –

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள புதுக்குப்பம் என்ற இடத்தில் நந்தகோபால் என்பவரின் மகன் வெங்கடேசன் வயது 43   வசித்து வருகிறார்.

வெங்கடேசன் குடும்பத்துடன் கடந்த மார்ச் 2 ஆம் தேதி அன்று மாலை 4 மணியளவில் வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்துடன் சாமித்தரிசனம் செய்ய திருப்பதி கோயிலுக்கு சென்றுள்ளார்.

பின்பு சம்பவ நாளான நேற்று மார்ச் 3 ஆம் தேதியன்று அதிகாலை 2 மணிக்கு வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். பூட்டிருந்த கேட்டை திறந்து வீட்டின் கதவைப் பார்த்த போது கதவு உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியுற்று, வீட்டின் உள்ளே சென்று அறைகளில் வைக்கப்பட்டிருந்த மூன்று பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் அவர்கள் வைத்திருந்த 35கால் ஆபரணத்தங்க நகைகள் மற்றும் பூஜைக்கு பயன்படுத்தக்கூடி வெள்ளி பொருட்கள் கொள்ளைப் போனது தெரிய வந்துள்ளது. இதுக்குறித்து ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் மேற்கூறியப்படி வெங்கடேசன் தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார். மேலும் அப்புகாரில் கொள்ளை அடித்துச்சென்ற முகம்தெரியாத கொள்ளையர்களை கண்டுப்பிடித்து அவர்களிடம் இருந்து எங்கள் வீட்டிலிருந்து எடுத்துச்சென்ற பொருட்களை மீட்டு தரும்படி தெரிவித்துள்ளார்.

இப்புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here