கும்மிடிப்பூண்டி, மார்ச். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் அமைந்துள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு, பள்ளி ஆண்டு விழா இன்று நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் அரசு பள்ளிகள் அனைத்திலும் ஆண்டு விழா நடத்தப்பட வேண்டும் எனும் அறிவிப்பின்படி 19 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பள்ளியில் ஆண்டு விழா இன்று நடைபெற்றதால் மாணவிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் அவ்விழாவில் நடைப்பெற்ற விளையாட்டுப் போட்டிகள் கலை நிகழ்ச்சிகளில் அப்பள்ளி மாணவிகள் பங்கேற்று தங்கள் தனி திறமைகளை வெளிப்படுத்தினர். மேலும் அதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும், பள்ளியில் மாநில மாவட்ட அளவில் பல்வேறு விளையாட்டு மற்றும் திறனறியும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராசன் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.
பள்ளி தலைமை ஆசிரியர், இதர ஆசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் ஆகியோர் அவ்விழாவில் மனம்மகிழப் பங்கேற்றனர்.