மீஞ்சூர், செப். 14 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் தேர்வு நிலை பேரூராட்சி பகுதிகளில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் பூங்காக்கள் அமைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அப்பணிகள் முடிந்து இன்று அதற்கான திறப்பு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் 2வது வார்டில் அமைக்கப்பட்ட சுடுகாடுகளுக்கான சுற்று சுவர். மற்றும் பூங்கா, 4வது வார்டு மற்றும் 17வது வார்டுகளில் அமைக்கப்பட்ட பூங்காக்கள் மற்றும் நீர்த்தேக்க தொட்டிகளின் சுற்றுசுவர் போன்ற ஐந்து இடங்களில் முடிவடைந்த வளச்சிப்பணிகளை பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ், துணைத்தலைவர் அலெக்சாண்டர்,செயல் அலுவலர் வெற்றிஅரசு, 1வது வார்டு கவுன்சிலர் சுகன்யா,2வது வார்டு கவுன்சிலர் அபூபக்கர்,4வது வார்டு கவுன்சிலர் சுமதிதமிழ் உதயன்,17வது வார்டு கவுன்சிலர் மோனிகாராஜேஷ் கருணாகரன் கருணாகரன். முப்புராஜ்.சிவக்குமார்.உள்ளிட்ட பிரதான பொதுமக்கள் உடன் இருந்தனர்.






















