திருவாரூர்,ஆக. 24 –
பாரதிய ஜனதா கட்சி மண்டல அளவிலான வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பயிலரங்கம் இன்று காலை 11 மணியளவில் திருவாரூரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைப்பெற்றது.
அப் பயிலரங்கத்தில், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மூன்று மாவட்டத்தை சேர்ந்த பயிலரங்க நிர்வாகிகள் அதில் பங்கேற்றனர்.
மாவட்ட பொதுச்செயலாளர் சி செந்தில் அரசன் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட தலைவர் எஸ் பாஸ்கர் அந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
மேலும் மாநில பொதுசெயலாளர் கருப்பு முருகானந்தம் அந்நிகழ்வினை வழி நடத்தினார். நாளை 25 மற்றும் 26 ஆகிய இரண்டு தினங்கள் அம்மண்டல பகுதிகளில் பாஜகவின் சார்பில் இல்லம் தோறும் சென்று புதிய வாக்காளர்களை சேர்க்கவும், நீக்க வேண்டிய வாக்காளர்களை கண்டறிந்து, அவர்களை நீக்குவது, மற்றும் இடம் மாறி வந்தவர்கள், வெளிநாட்டில் வாழ்பவர்கள் உள்ளிட்டவர்களை எப்படி வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பது போன்ற பயிற்சிகள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
இப் பயிலரங்கத்தில் சுமார் 240 க்கும் மேற்பட்டவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள் மேலும், மாநில விவசய அணிசெயலாளர் கோவி chandru மாநில செயற்குழு உறுப்பினர் கோட்டூர் ராகவன், மாவட்டதுணை தலைவர்கள். மணிமேகலை,மற்றும் சதாசதிஷ், ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர் கழுகு எஸ் சங்கர், ஐ டி பிரிவு மாவட்ட தலைவர் சதிஸ்குமார், மாவட்ட மகளிர் அணி தலைவி ரமாமணி ஒன்றிய தலைவர்கள் திருவாரூர் சந்திரசேகர் களத்தூர் ரங்கா, சிமிலி அய்யப்பன், நன்னிலம் முத்துகுமரன் மண்ணை மேற்கு செல்வம், .நன்னிமங்கலம் பிரசாத் மண்ணை நகரம் ரகுராமன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியாக திருவாரூர் நகர தலைவர் எஸ் கணேசன் நன்றி கூறினார்கள்



















