பொன்னேரி, ஜூலை. 07 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ளது உத்தண்டிகண்டிகை கிராமம், மேலும் இக்கிராமத்தில் அமைந்துள்ள வெகு பிரசித்திப்பெற்ற அருள்மிகு ஸ்ரீரேணுகா பரமேஸ்வரியம்மன் திருக்கோயில் மகாகும்பாபிஷேகம் விழா இன்று நான்கு யாக கால பூஜைகளுடன் நிறைவுப்பெற்றதைத் தொடர்ந்து, புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கடங்களில் நிரப்பப்பட்டு, அங்கு பூஜிக்கப்பட்ட கடங்கள் புறப்பாடு நடைப்பெற்று, அத்திருக்கோயிலை வளம் வந்து கோபுர கலசம் சென்றடைந்தது.
தொடர்ந்து, காலை 10 மணியளவில் சிவச்சாரியர்கள் வேதமந்திரங்கள் ஓதி, கருடப்பகவான் மற்றும் கலங்கள் காவல் தெய்வங்கள் மற்றும் தேவதைகள் உள்ளிட்ட பரிகார தெய்வங்களுக்கு கற்பூர ஆராதனை காட்டப்பட்டு கும்பகலங்களுக்கு அபிஷேகம் நடைப்பெற்று மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.
தொடர்ந்து இவ்விழாவினை காண வந்த பக்தர்கள் மீது புனித நீரானது தெளிக்கப்பட்டது. மேலும் இவ்விழாவில் பங்கேற்க இக்கிராமச் சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.
இந்நிகழ்ச்சி ஏற்பாடுகள் அனைத்தையும், அவ்வூர் கிராம மக்கள் வெகுச்சிற்பாக செய்திருந்தனர். இவ்விழாவில் பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கும் அறு சுவை உணவும் கோவில் பிரசாதமும் வழங்கப்பட்டது. பொது மக்கள் அனைவரும் கோபுர தரிசனம் மற்றும் சுவாமி தரிசனம் செய்து மனம் மகிழ்ந்தனர்.




















