மயிலாடுதுறை, பிப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் …
தமிழக அரசை கண்டித்து இரண்டாவது நாளாக வருவாய் துறை ஊழியர்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே வேலை நிறுத்த தர்ணாப் போராட்டம் நடைப்பெற்றது. அதில் பழைய பென்ஷன் திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து கண்டன முழக்கங்களை அவர்கள் எழுப்பினார்கள் .
திமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் சரண் விடுப்பு தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் ஏராளமான அரசு ஊழியர்கள் பங்கேற்று கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.