பெரியபாளையம், ஜூலை. 07 –
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம். பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் பின்புறம் அமைந்துள்ளது மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.
மேலும் இம்மருத்துவமனையில் பொது மருத்துவம் பெண்கள் மகப்பேறு மருத்துவம் உள்ளிட்டவைகளுக்கு, சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இம்மருத்துவமனைக்கு பெரியபாளையம், ஆத்துப்பாக்கம், தண்டலம், முகரம்பாக்கம், பருத்தி மேனி குப்பம், குமார பேட்டை, 82 பனப்பாக்கம், வடமதுரை, ராள்ளாபாடி, உள்ளிட்ட 20.க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் தாங்களுக்கான மருத்துவ சிகிச்சைகளை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று இரவு பெரியபாளையம் கிராமத்தில் சேர்ந்த கோபி என்பவரின் மகன் 8 வது வகுப்பு படித்து வருகிறார். அச்சிறுவன் அவர்களது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது, அப்பகுதியில் உள்ள தெரு நாய் கடித்துள்ளது.
உடனடியாக அவரது தந்தை கோபி மகனை அழைத்துக் கொண்டு அம்மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, அங்குள்ள மருத்துவ ஊழியரிடம் தன் மகனை நாய் கடித்த விவரம் பற்றி எடுத்துக்கூறி சிகிச்சை அளித்திடும்படி தெரிவித்துள்ளார். அதற்கு பதிலளித்த அவ்வூழியர் தற்போது மருத்துவர் இல்லை எனவும், அவசரமெனில் திருவள்ளூர் மருத்துவமனைக்கு செல்லுங்கள் என்றும் இல்லையெனில் காலையில் வந்தால் சிகிச்சை பெறலாம் எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இருவருக்குள்ளும் வாக்குவாதம் முற்றிய நிலையில், அவ்வூழியர் அச்சிறுவனின் தந்தையை தகாத வார்த்தைகளில் திட்டியதாகவும், மேலும் ஒழுங்காக மருத்துவமனையை விட்டு வெளியே செல்லும்படியாகவும், அச்சிறுவனின் தந்தை புகார் தெரிவிக்கின்றார்.
மேலும் தொடர்ந்து இருவருக்கிமிடையே நடைப்பெற்ற வாக்குவாதத்திற்கு பின்பு சுமார் இரண்டு மணி நேரத்திற்கு பின்பு மருத்துவர் வந்து அச்சிறுவனுக்கு சிகிச்சை வழங்கப்பட்டதாக மேலும் அவர் தெரிவிக்கின்றார்.
இது மட்டுமல்லாமல் அங்குள்ள சில நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவிக்கையில் இந்த மருத்துவமனையில் இரவு நேரங்களில் மருத்துவர்கள் வருவதில்லை என்றும் விபத்துகள் சிக்கும் நபர்களுக்கு முதலுதவி செய்வதற்கு கூட மருத்துவர்கள் இல்லாததால் பலரும் உயிரிழக்கும் அபாயமும் ஏற்படுவதாகவும். இதுகுறித்து பலமுறை இப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட துறைக்கு தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கின்றனர். மேலும் இப்பிரச்சினைக் குறித்து துறைச்சார்ந்த அலுவலர்களும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
செய்தியாளர் வைஷ்ணவி …


















