திருத்தணி, ஜன. 30 –
செய்தி சேகரிப்பு: K.B. சுந்தரம்
திருத்தணி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட நெசவுத்தொழிலில் ஈடுப்படும் தொழிலாளிகள் மற்றும் முதலாளிகள் இடையே கூலி தொடர்பான பிரச்சினைக்கு தீர்வுக் காண திருத்தணி வருவாய் கோட்டாச்சியர் தலைமையிலான ஆலோசனை கூட்டம் கடந்த 28 – 2022 ஆம் தேதி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட கிராமங்களில் உள்ள நெசவாளர்களின் கூலி உயர்வு ஒப்பந்தம் நடை முறைப் படுத்தப் படாமல் உள்ளது. அதன் தொடர்பாக மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு செய்ததின் பேரில், நெசவுத் தொழிலில் ஈடுப்படும் முதலாளிகள் மற்றும் தொழிலாளிகள் இடையே திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலான பேச்சுவார்த்தைக் கூட்டம் நடப்பெற்றது. அக்கூட்டத்தில் திருத்தணி காவல் ஆய்வாளர், தொழிலாளர் நலத்துறை அலுவலர் மற்றும் நெசவு முதலாளிகள், தொழிலாளிகள் சார்பில் அவர்களின் பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனர். மேற்படி பேச்சுவார்த்தையின் போது இருதரப்பு பிரதிநிதிகள் தங்களின் பல்வேறு கருத்தினை தெரிவித்தனர்.
தொழிலாளர்கள் தரப்பில் இருந்து 2013 – 14 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட கூலி உயர்வு தற்போது நடைமுறைப் படுத்த வேண்டும், அனைத்து கிராமங்களிலும் ஒரே மாதிரியான ரகங்களுக்கு ஒரே கூலி தரப்பட வேண்டும், நூல்விலை ஏற்றம் தடுக்கப்பட வேண்டும், நூல் இழைப்புக்கென பிடித்தம் செய்யப்படும் கூலி தவிர்க்கப் படவேண்டும், 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவுத்தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு தரப்பட வேண்டும், முதலாளிகளின் கீழ் உள்ள ஏஜென்டுகள் நெசவு தொழிலாளர்களுக்கு ஒரே கூலி தர வேண்டும், 8 வருடமாக கூலி உயர்வு தரப்படாமல் உள்ளது அதனை உடனடியாக நடைமுறைப்படுத்தவேண்டும், ஏற்கனவே கொடுக்கப்பட்ட கூலியை குறைக்க கூடாது என்பது போன்ற கருத்தினை தொழிலாளர்கள் பிரதிநிதிகள் கருத்தினை முன் வைத்தனர்.
அதனைத்தொடர்ந்து முதலாளிகள் தரப்பு பிரதிநிதிகள் இழைப்பு கூலி ரூ. 40 க்கு ரூ. 1.50 ரூபாயும், 60க்கு 2 ரூபாய் எனவும் ஒரு கிராமத்தில் 50 பேர் முதலாளிகளாக உள்ளதாகவும், நிறைய முதலாளிகளுக்கு மேற்படி விவரம் தெரியாமல் இருப்பதால் 2 நாட்கள் நேரம் தேவைப்படுகிறது எனவும் கூட்டத்திற்கு வந்துள்ள நாங்கள் கூலியை குறையாமல் கொடுத்து வருகிறோம், முதலாளிகள் அனைவரும் கூலியை குறைக்காமல் கொடுக்க வேண்டும் என்றும், மேலும் கூலியைக் குறைத்துக் கொடுக்கும் முதலாளிகளுக்கும் அழைப்பு விடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது, அதனைத்தொடர்ந்து 2031 ஆம் ஆண்டு கீலி செயல் முறை இல்லை எனவும் மேலும் தற்போது ஜி.எஸ்.டி யால் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் வாரத்திற்கு இரண்டு முறை நூல் உயர்வு ஏற்றத்தால் பாதிப்புகள் உள்ளதாகவும், 3 வருடத்திற்கு ஒருமுறை ஏற்றம் காண வேண்டிய பஞ்சு விலை தற்போது அடிக்கடி விலை ஏற்றம் அடிக்கடி நிகழ்வதால் துணி விற்பனை செய்து பணம் வந்து சேர 6 மாதம் காலம் ஆகிறது அதனால் பல இழப்புக்களை எதிர்கொள்ள வேண்டிவுள்ளது எனவும், தொடர்ந்து கொரோனா சமயம் என்பதால் விற்பனைகளும் குறிப்பிட்ட அளவிற்கு இல்லை எனவும் அவர்கள் தரப்பில் எடுதுரைக்கப்பட்டது.
பேச்சு வார்த்தைக் கூட்டத்தின் இறுதியில் முதலாளிகள் தரப்பில் ரகம், அச்சு, இழை, இன்ச், உடை, பீஸ், என்ற வகையில் கூலி நிர்ணயிக்கப்பட்டு 600 மீட்டருக்கு ரூ. 11,500, 11,250, 10,950, 7650, 7950, 8250, 7350 என கூலியை நிரணயித்து ஒரு பட்டியலை வழங்கினார்கள். அதற்கு தொழிலாளிகள் தரப்பில் இருந்து முதலாளிகள் நிர்ணயித்து வழங்கப்பட்ட பட்டியலில் இருந்து மீட்டருக்கு 50 பைசா கூலியை அனைத்து ரகங்களுக்கும் உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கையை முன் வைத்தனர். அதனைத் தொடர்ந்து முதலாளிகள் தரப்பில் அக்கோரிக்கை ஏற்கப்பட்டு அவ்வாறே வழங்குவதாக உறுதியளித்தனர். இதனைத்தொடர்ந்து முதலாளி மற்றும் தொழிலாளிகள் தரப்பில் இந்த ஒப்பந்தத்தில் திருத்தணி வருவாய் கோட்டாட்சியர், திருத்தணி காவல் ஆய்வாளர், மற்றும் தொழிலாளர் நலத்துறை அலுவலர் ஆகியோர் முன்னிலையில் கையொப்பம் செய்து கொண்டனர். இருதரப்பினருக்கிடையே கூலி தொடர்பான பேச்சு வார்த்தை சுமூகமாக முடிந்தது.




















