மீஞ்சூர், மார்ச். 24 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு கிராமத்தில் வெற்றி நிச்சயம் சோசியல் அறக்கட்டளை சார்பில் உலக மகளிர் தின விழா அப்பகுதியில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது.
மேலும் இவ்விழாவிற்கு அத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சுகந்திவடிவேல் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எம்.டி. ஜி.கதிர்வேல் ஒன்றிய கவுன்சிலர் சங்கீதா அன்பழகன். ஊராட்சியின் செயலர் பொற்கொடி முருகானந்தம். உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில்,பல்வேறு துறைகளில் சாதனைப் புரிந்த மகளிருக்கு சான்றுகளையும், கேடயங்களையும் ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேல் வழங்கினார். மேலும் அவர்களை பாராட்டும் விதமாக மரியாதைகள் செய்யப்பட்டு ஊக்குவிக்கும் வகையில் வாழ்த்தி பேசினார்.
மேலும் அதனைத்தொடர்ந்து நடன நிகழ்ச்சிகளும் பல்வேறு விதமான உணவு வகைகளும் செய்து வழங்கப்பட்டது. இதில் வார்டு உறுப்பினர் கோமதிநாயகம். ஊராட்சியின் குழு கூட்டமைப்பு தூயவன், விஜயரத்தினம், நந்தினி பிரியா, சண்முகப்பிரியா, சாகிராபானு, கன்னிகா, சாம்ஹேசண்ணா, சாமிளா, குமுதா உள்ளிட்டவர்களும் திரளான அப்பகுதி வாழ் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.






















