திருவள்ளூர், பிப். 21-

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …

திருவள்ளூர் மாவட்டம், அரண்வாயில் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி (55)  அப்பகுதியில் உள்ள பீர் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த நிலையில், ரத்த கொதிப்பு மற்றும் சர்க்கரை நோய்க்காக திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளர்.

மேலும் அவருக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி  அம்மருத்துவ மனை செவிலியர்கள் அவருடைய கை கால்களை படுக்கையில் கட்டி போட்டு வைத்திருந்தாக தெரிகிறது.

இந்நிலையில், முனுசாமி முதலாவது மாடியில் இருந்து ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கும் இடத்தின் அருகே குதித்து கீழே விழுந்துள்ளார். அதில் அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், நிகழ்விடத்திலேயே அவர் உயிர் பிரிந்துள்ளது.

இவ்விபத்துக் குறித்து தகவலறிந்து அங்கு வந்த காவல் துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அம் மருத்துவமனைக்கே அனுப்பி வைத்தனர். மேலும் அச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். உயிரிழந்த முனுசாமிக்கு நாகபூஷணம் என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். அச்சம்பவத்தால் அம் மருத்துவமனை வளாகம் முழுவதும் பரபரப்பு நிலவியது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here