காஞ்சிபுரம், பிப். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் …
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பென்னலூர் பகுதியில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சென்டர் மீடியன் எனும் சொல்லப்படும் தடுப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தேசிய நெடுஞ்சாலைகளில் சென்டர் மீடியனில் செடிகள் வைக்கப்படுவது வழக்கும். அந்த வகையில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சென்டர் மீடியனில் வைக்கப்பட்ட செடிகள் கடும் வெயில் காரணமாக காய்ந்துள்ளன.
அதன் காரணமாக திடீரென அச்செடிகளில் தீ பற்றி எரிந்தது. அதனைத்தொடர்ந்து மளமளவென அருகே பரவி அடுத்தடுத்து உள்ள காய்ந்த செடிகள் மீது தீயானது பரவி கடும் புகை மூட்டம் அப்பகுதி முழுவதும் ஏற்பட்டுள்ளது. அதனால் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
அத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவ்விபத்துக் குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்து சென்றார்களா அல்லது இயற்கையாகவே வெயிலின் காரணமாக தீப் பற்றியதா அல்லது வேறேதும் காரணங்கள் உள்ளனவா என்றவாறு பல்வேறு கோணங்களில் அவர்கள் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட திடீரென ஏற்பட்ட அத் தீ விபத்தால் என்னவென்று தெரியாமல் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் திகைப்பில் ஆழ்ந்தனர்.




















