பொன்னேரி, மார்ச். 05 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு உறுதிக் குறித்த அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று பொன்னேரியில் உள்ள தனியார் மண்டபத்தில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது.
மேலும் இக்கூட்டத்திற்கு, பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன், மாவட்ட எஸ். பி சியாஸ் கல்யாண், பொன்னேரி வட்டாட்சியர் செல்வகுமார் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.
மேலும் இக்கூட்டத்திற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் விடுக்கப்பட்டிருந்த அழைப்பினை ஏற்று, அக்கூட்டத்தில் பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு சுற்று வட்டாரப் பகுதிகளில் இயங்கும் தொழிற்சாலைகளின் மேலாளர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
மேலும் வருவாய்த்துறை, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அலுவலர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். மேலும் இக்கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே அங்கு செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களை கூட்ட அரங்கத்தை விட்டு மாவட்ட ஆட்சியர் வெளியேறும்படி தெரிவித்தார்.
மேலும் இக்கூட்ட முடிவில் செய்தியாளர்களை அழைப்பதாகவும் அப்போது அவர் குறிப்பிட்டார். மேலும் அதுவரை செய்தியாளர்கள் யாரும் அரங்கத்தின் உள்ளே வர வேண்டாம் எனவும் கட்டளையிட்டார்.
அதனைத் தொடர்ந்து அங்கு நடைப்பெற்ற அக்கூட்ட அரங்கின் கதவை மூடி, உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து செய்தி சேகரிக்க அங்கு வந்த பத்திரிகையாளர்கள் கூட்டம் முடியும் வரை வெளியே காத்திருந்தனர்.
கூட்டத்தின் முடிவில் மாவட்ட ஆட்சியர் பத்திரிக்கையாளர்களுடனான சந்திப்பு நடைப்பெற்றது அப்போது மாவட்ட ஆட்சியர் … வடமாநில தொழிலாளர்கள் தங்களது நிறுவன உரிமையாளர்களின் பாதுகாப்பில் இருக்க வேண்டுமெனவும், மேலும், அவர்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்படும் காலக்கட்டத்தில் அதுக்குறித்தப் புகாரினை அப்பகுதி காவல் நிலையத்தில் உடனடியாக புகார் தெரிவித்து, அத்தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அக்கூட்டத்தில் அந்நிறுவனங்களின் சார்பில் பங்கேற்ற பிரதிநிதிகளிடம் அறிவுறுத்தப்பட்டதென தெரிவித்தார்.