காஞ்சிபுரம், மார்ச். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது.. இந்திய நாடாளுமன்ற தேர்தல் தேதி நேற்று மாலை 3 மணி அளவில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜ்குமார் வெளியிட்டார்.
அவ்வறிவிப்பின் படி தமிழகம் உள்ளிட்ட பாண்டிச்சேரிக்கும் அடுத்த மாதம் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. மேலும் பதிவான வாக்குகள் என்னும் பணி ஜூன் 4 ஆம் தேதி நடைபெற உள்ளதாக அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தலைமை தேர்தல் ஆணையர் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலருக்கு தேர்தல் நன்னடத்தை விதிகளை கடைபிடிக்கும் படி அறிவுறுத்தியுள்ளார்.
தேர்தல் தேதி அறிவித்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக அறையில் இருந்த முதல்வர்கள் படம் அகற்றப்பட்டும், தேர்தல் நடத்தும் அலுவலர் என்ற ஸ்டிக்கர் பொருத்தப்பட்டது.
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மூன்றாம் தளத்தில் தேர்தல் கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு டிவிகள் பொருத்தப்பட்டு அதை கண்காணிக்க அலுவலர்கள் நியமிக்கப்பட்டும் உள்ளனர்.
மேலும் தேர்தல் குறித்த சந்தேகங்கள் மற்றும் புகார்களை தெரிவிக்க அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் அறிவித்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்துவதற்கான வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது.






















