கும்பகோணம், மார்ச். 05 –
கும்பகோணத்தில் நடைப்பெற்று வரும் மாசிமகத் திருவிழாவினை முன்னிட்டு, அத்திருவிழாவின் பகுதியாக நடைப்பெற்ற அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில் திருத்தேரோட்டம் நடைப்பெற்றது. அந்நிகழ்வில் கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுப்புற வட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் அத்தேரோட்ட விழாவில் பங்கேற்று தேரின் வடம் பிடித்திழுத்து சுவாமி தரிசனம் செய்து உளம் மகிழ்ந்தனர்.
கும்பகோணத்தில் பாஸ்கர சேஷ்திரம், பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஓருமுறை நடைபெறும் உலக பிரசித்தி பெற்ற மகாமக பெருவிழா காணும் மாநகரம் என அனைவராலும் போற்றப்படுவதும் மேலும் பல்வேறு திருத்தலங்களை தன்னகத்தேக் கொண்டுள்ள பெருமைமிகு மாநகரம் இக் கும்பகோணம் நகரமாகும். மேலும், மகாமகம் பெருவிழா தொடர்புடைய பனிரெண்டு சிவாலயங்களில் முதன்மையான ஸ்தலமாக விளங்குவது அருள்மிகு மங்களாம்பிகா சமேத ஆதிகும்பேஸ்வரசுவாமி திருக்கோயில் இம்மாகரப் பகுதியில் அமையப்பெற்றுள்ளது இந்நகரத்திற்கு மேலும் ஒரு சிறப்பை தருவதாகும்.
மேலும் இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் பத்து தினங்கள் நடைப்பெறும் மாசிமகத் திருவிழா அப்பகுதி மக்களிடையே பெருத்த எதிர் பார்ப்புடனும், ஆவலுடனும் காத்திருந்து கொண்டாடப் படுவது இதன் மற்றொறு சிறப்பாகும்.
அதுபோல், இவ்வாண்டும் இத்திருவிழாவிற்காக அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயிலில் கடந்த மாதம் பிப் 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து தினசரி காலை மற்றும் மாலை வேளையில் பல்வேறு வாகனங்களில் இக்கோயில் உற்ச்சவர் வீதி உலா நடைபெற்று வருகிறது.
மேலும் அத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த வெள்ளிக் கிழமையன்று அதிகாலை விநாயகர் தேரோட்டமும்,அதனைத் தொடர்ந்து முருகன் தேரோட்டமும் நடைபெற்றது. இதில் திரளான கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியிலிருந்து விழாவின் காண வந்திருந்த திரளானப் பக்தர்கள் அத்திருத்தேரின் வடம் பிடித்திழுத்து சுவாமி தரினம் செய்து உளம் மகிழ்ந்தனர்.
முகப்பு வழிப்பாட்டுத் தலங்கள் திரளான பக்தர்கள் பங்கேற்ற கும்பகோணம் அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில் திருத்தேரோட்டம் : தேர் வடம் பிடித்திழுத்து...



















