எல்லாபுரம், ஆக. 07 –
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பெரியபாளையம் பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்ட அவரது திருவுருவப் படத்திற்கு, ஒன்றியச் செயலாளர் மூர்த்தி தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில், மாவட்ட கவுன்சிலர். சித்ரா முனுசாமி, மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் தனசேகரன், ஒன்றிய அவைத் தலைவர் ரவிச்சந்திரன், சிறுபான்மை மாவட்ட துணை அமைப்பாளர் மொய்தீன், ஒன்றிய பிரதிநிதி சம்பத், தமிழரசு, சுப்பையா, முனுசாமி, கிளைச் செயலாளர் எல். சீனு, ராஜன் ஆகியோர் உட்பட திரளான கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.





















