மீஞ்சூர், மே. 14 –

மீஞ்சூர் தேர்வுநிலை பேரூராட்சியில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் 25 பயனாளிகளுக்கு ஒதுக்கீடு உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் தேர்வுநிலை பேரூராட்சி யில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் 25 பயனாளிகளுக்கு ஒதுக்கீடு வழங்கும் நிகழ்ச்சி பேரூராட்சி வளாக மையத்தில் நடைபெற்றது பேரூராட்சி தலைவர் மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றி அரசு முன்னிலை வகித்தார். பேரூராட்சி துணைத்தலைவர் அலெக்சாண்டர் வரவேற்க சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் கலந்துகொண்டு 25 பயனாளிகளுக்கு வீடு வழங்கும் உத்தரவு அட்டையை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் வார்டு கவுன்சிலர்கள் பரிமளா அருண்குமார், துரைவேல் பாண்டியன், அபூபக்கர், ரஜினி, நக்கீரன், ஜெயலட்சுமி தன்ராஜ், குமாரி புகழேந்தி, கவிதா சேகர், சங்கீதா சேகர், மோனிகா ராஜேஷ், ஜெயலட்சுமி குமார், தலைமை எழுத்தர் அன்பரசு, சுகாதார மேற்பார்வையாளர் ஆனந்தன் உள்ளிட்டோர் பலர் உடனிருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here