திருவாரூர், டிச. 01 –
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1 ஆம் தேதி உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் கல்விக் குழுமம் சார்பாக உலகம் முழுவதும் உள்ள எய்ட்ஸ் நோயாளிகளுக்கு ஆதரவளிக்கும் வகையிலும் எய்ட்ஸ் நோயால் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நோய் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நேதாஜி கல்வி குழுமத்தின் 500 மாணவ மாணவிகள் மனித உருவ ரெட் ரிப்பன் அடையாளத்தை உருவாக்கியும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வருமுன் காப்போம், எய்ட்ஸ் இல்லா உலகம் படைப்போம் என்ற வாசகத்தைக் முழக்கமிட்டனர்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் தாளாளர் வெங்கட்ராஜலு, செயலர் சுந்தர்ராஜ், முதன்மை செயல் அதிகாரி முனைவர் நிர்மலாஆனந்த், இயக்குனர் விஜயசுந்தரம், முதல்வர் முனைவர் சிவகுருநாதன், மற்றும் துணை முதல்வர்கள் துறைத்தலைவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


















