செவ்வாய்பேட்டை, ஜன. 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக, செய்தியாளர் ஹரிகிருஷ்ணன்
திருவள்ளூர் மாவட்டம் மற்றும் திருவள்ளூர் ஒன்றியத்திற்குட்பட்ட செவ்வாப்பேட்டை ஊராட்சியில் தை திருநாளை முன்னிட்டு, நேற்று தமிழர் பாரம்பரிய விளையாட்டு மற்றும் கலைகளை பறைசாட்டும் வகையில் பண்பாட்டு நிகழ்ச்சிகளூடன் சமத்துவ பொங்கல் வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது.
அதில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கபடி, உறியடித்தல் போன்ற விளையாட்டுப் போட்டிகளில் சிறுவர் மற்றும் பெரியவர்கள் என அனைவரும் உற்சாகத்துடன் பங்கேற்று மிகச்சிறப்பாக விளையாடியது காண்போரை மகிழ்ச்சியடைய செய்தது. மேலும் அவ்விழாவில் அப்பகுதி வாழ் மக்கள் திரளாக வந்திருந்து சிறப்பித்தனர்.
முன்னதாக பொங்கல் தை திருநாள் விழாவினை முன்னிட்டு ஊராட்சி மன்ற வளாகம் முழுவதும் அவ்விழாவில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான மகளிர் தங்கள் தனித்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் அழகிய வண்ணக் கோலங்கள் வரைந்திருந்தது. அனைவரின் பாராட்டினை பெற்றது.
மேலும் அவ்விழாவினை தலைமையேற்று நடத்திய அவ்வூராட்சித் தலைவர் திருமதி டெய்சி ராணி அன்பு சமத்துவப் பொங்கல் விழாவினை விளக்கேற்றி துவக்கி வைத்தார். உடன் துணைத் தலைவர் சசிகலா கோபிநாத் மற்றும் வார்டு உறுப்பினர்களும் ஊராட்சி செயலாளர் பி.எல்.எப் இருந்தனர்.
தொடர்ந்து இயற்கை வழிப்பாட்டிற்கு பின்பு, படைக்கப்பட்ட சர்க்கரைப் பொங்கல் சாதி மத வேறுபாடுயின்றி அவ்விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் பரிமாறப்பட்டு உளம் மகிழ அனைவரும் அவ்விழாவினை குதுகலமாக கொண்டாடினார்கள்.
அதனைத் தொடர்ந்து, மாலை கோல போட்டி, சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கான கபடி, உறியடி போன்ற தமிழர் பண்பாடை பறைச்சாற்றும் பாரம்பரிய விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. அதில் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட திரளான பொதுமக்களும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். விழாவின் நிறைவாக ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் நன்றி உரை நிகழ்த்தினார்.


























