சென்னை, ஜன. 10 –
சென்னை மாநகர போக்குவரத்து தலைமைக் கழக தலைமையகத்தில் இன்று ரூ.72.25 கோடி மதிப்பீட்டில் மகளீர் மற்றும் குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்கின்ற வகையில் ஏற்படுத்தப் பட்ட நிர்பயா திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாடு மையம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் பங்கேற்ற இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மையத்தினை ரிப்பன் வெட்டி மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மூலம் தொடங்கி வைக்கப்பட்ட இம்மையம் சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக தலைமையகத்தில் இன்று நடைப்பெற்றது. இம்மைய செயல்பாட்டின் மூலம் மகளீர் மற்றும் குழந்தைகளின் நலன் பாதுகாக்கப் படும் என தெரிவிக்கப் படுகிறது.
மேலும் இத்திட்டத்தின் கீழ் 2,330 பேருந்துகள் மற்றும் பணிமனைகள், பேருந்து நிலையங்கள் என 63 இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அதற்காக சென்னை பெருநகர் போக்குவரத்து கழக தலைமையகத்தில் ரூ.4.72 கோடி மதிப்பீட்டில் இரண்டாம் கட்டமாக அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தினை அமைச்சர் இன்று தொடங்கி வைத்தார்.
மேலும் இத்திட்டம் ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசு நிர்பயா திட்டத்தின் கீழ் ரூ.72.25 கோடி மதிப்பீட்டில் 2500 பேருந்துகள் மற்றும் பணிமனைகள், பேருந்து நிலையங்கள் என மொத்தமாக 66 இடங்களில் கேமராக்கள் பொருத்தும் பணி நடைப்பெற்று, தற்போது 2330 பேருந்துகள் மற்றும் பணிமனைகள் பேருந்து நிலையங்கள் என மொத்தமாக 63 இடங்களில் முடிவுப்பெற்ற இத்திட்டமானது இன்று அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது.
மேலும் இத்திட்டம் கடந்த மே 14, 2022 ஆம் தேதியன்று தமிழ்நாடு முதலமைச்சரால் 500 பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பரிச்சார்த்த முறையில் முதற்கட்டமாக தொடங்கி வைக்கப்பட்டது.
மேலும் இத்திட்டம் அமுலக்கப்பட்ட தினத்திலிருந்து இன்று வரை மகளீர் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பினை அச்சுறுத்தும் வகையில் எவ்வித அழைப்பும் பேருந்துகளில் இருந்து இம்மையங்களுக்கு வரப் பெறவில்லை என்பதும், மேலும் இதனை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக இன்று 1830 பேருந்துகளில் கண்காணிப்பு பொருத்தப்பட்டு மொத்தமாக 2330 பேருந்துகளில் இத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கதாகும்.
மேலும் சென்னை பெருநகர் போக்குவரத்துக் கழகத்தைச் சார்ந்த 2330 பேருந்துகள் ஒவ்வொன்றிலும் ஒரு மொபைல் நெட்வொர்க் வீடியோ ரெக்கார்டர் 3 கண்காணிப்பு கேமராக்கள், 4 அவசர கால பொத்தான்கள் மற்றும் ஒரு ஒலிப்பெருக்கியுமாக, மொத்தம் 2,330 மொபைல் நெட்வொர்க் வீடியோ ரெக்கார்டர் 6,990 கண்காணிப்பு கேமாரக்கள், 9,320 அவசரகால பொத்தான்கள் மற்றும் 2,330 ஒலிப்பெருக்கிகள் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது.
இதனால் பேருந்துகளில் பயணிக்கும் மகளீர் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் ஏதேனும் அசம்பாவிதம் நடைப்பெறும் பட்சத்தில் பேருந்துகளில் பொருத்துப்பட்டுள்ள அவசரகால பொத்தனை அழுத்தினால், பேருந்தில் உள்ள ஒலிப்பெருக்கி வாயிலாக ஒலி எழுப்ப ப்பட்டு ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மற்றும் பயணிகளின் கவனத்திற்கு அவ்வொலி கொண்டு செல்லும், மேலும் அதனைத்தொடர்ந்து ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டாபாட்டு மையத்திற்கும் தானாகவே ஒரு நிமிட காணொலிக் காட்சிப் பதிவை உடனடியா அனுப்புவதோடு, மேலும் இப்பதிவானது ஆய்வு செய்யப்பட்டு அசம்பாவிதம் உறுதியாகும் நிலையில் சென்ன பெருநகரக் காவல் கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் தெரிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
மேலும் இந்த ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாடு மையமானது 6 ஆயிரம் சதுர அடியில் இரண்டு அடுக்கு தளம் கொண்ட கட்டிமாகவும், மேலும் இந்த மையத்தில் 40 அடி நீளமும் 7 அடி உயரமும் கொண்ட காட்சித்திரையுடன் 16 கணணி இயக்குபவர்கள் அமர்ந்து கண்காணிக்கும் அறை மற்றும் கலந்தாய்வு கூடம் கொண்ட வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்நிகழ்வின் போது போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, போக்குவரத்துத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் டாக்டர் கே.கோபால் மற்றும் மாநகர் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் அ.அன்பு ஆபிரகாம் ஆகியோர் உடனிருந்தனர்.






















