கும்பகோணம், ஜன. 25 –

கும்பகோணத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி. கே. பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிவிப்பில் இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து கடந்த 1965 ஜனவரி 25-ம் தேதி தமிழகத்தில் தொடங்கப்பட்ட போராட்டம், உலகம் கண்டிராத மாபெரும் புரட்சியாகும்.

இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து 1965 ஜனவரி 25ஆம் நாள்  தமிழுக்காக போராடி தங்களின் இன்னுயிர் துறந்த மொழிப்போர் தியாகிகளுக்கு அதிமுக மாணவரணி சார்பில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி காந்தி பூங்கா அருகே மாணவரணி மாவட்ட செயலாளர் சரவணன் தலைமையில் மொழிப்போர் தியாகிகளுக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில் கழக துணை ஒருங்கிணைப்பாளர் சட்டமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் முன்னாள் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் பாரதி மோகன் நகரச் செயலாளர் ராம ராமநாதன் ஒன்றிய செயலாளர்கள் சோழபுரம் அறிவழகன் என்ஆர்விஎஸ் செந்தில் மற்றும் நிர்வாகிகள் மாணவர் அணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here