சென்னை, மே. 28 –
சென்னை அருகே தனது மனைவி, மகள், மகன் என மூவரையும் மரம் அறுக்கும் இயந்திரம் கொண்டு கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தானும் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை.செய்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் வெங்கடேஸ்வரர் நகரில் பிரகாஷ் (41), மனைவி காயத்திரி (39), மகள் நித்தியஸ்ரீ (11), மகன் ஹரிகிருஷ்ணன் (8) ஆகியோர் குடும்பத்துடன் வசித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் அருகில் வசிக்கும் பிரகாஷ் என்பவரின் குடும்பம் தற்கொலைக்கு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். உடனடியாக காப்பாற்ற வாருங்கள் என அவரது வீட்டு விலாசத்தை கொடுத்து அழைத்ததாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்த 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது வீடு உள்ளே பூட்டியிருந்துள்ளது. பின்னர் அருகில் உள்ள சங்கர் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்த சங்கர்நகர் காவல் ஆய்வாளர் ஆல்பீன் ராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். வீடு பூட்டியிருந்ததால் ஜன்னல் வழியே உள்ளே பார்த்தபோது இரத்த வெள்த்தில் நான்கு பேரும் சரிந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கணவன், மனைவி, மகள், மகன் என நான்கு பேரும் இரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் இருப்பதை கண்டனர்.
பின்னர் நான்கு பேரின் உடலை மீட்ட போலீசார் குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னர் போலீசார் அக்கம் பக்கத்தில் தங்களது விசாரணையை துவங்கினர். விசாரணையில் தனியார் ஐடி நிறுவன ஊழியரான பிரகாஷின் மனைவி வீட்டின் அருகே நாட்டு மருந்து கடை நடத்தி வருவதும், வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத சூழலில் இருந்த நிலையில்,கடன் கொடுத்தவர்கள் கொடுத்த பணத்தை கேட்டு தொந்தரவு செய்ததாகவும், கடனை திருப்பி கொடுக்க பணம் இல்லாததால் குடும்பத்துடன் இறந்துவிடலாம் என்று எண்ணி முடிவெடுத்து பிரகாஷ் முதலில் மனைவி, மகள், மகன் மூவரையும் மரம் அறுக்கும் இயந்திரத்தால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு பின்னர் தானும் அதே இயந்திரத்தால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனைர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரின் உயிரிழப்பிற்கு உண்மையான காரணம் என்ன என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுப்போன்றே கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடன் தொல்லையால் சென்னை பெருங்குடியில் வசித்து வந்த நபர் மனைவி, குழந்தைகளை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
இந்த 4 பேர் தற்கொலை தொடர்பாக தாம்பரம் காவல் ஆணையர் ரவி செய்தியாளரிடம் கூறும்போது, தற்கொலை செய்து கொண்ட பிரகாஷ் தற்கொலை நோட் எழுதி வைத்துள்ளார். ஆங்கிலத்தில் அந்த தற்கொலை குறிப்பு உள்ளது. தங்களை யாரும் தற்கொலைக்கு தூண்டவில்லை.. நாங்களே எடுத்துகொண்ட முடிவு என எழுதி சுவரில் ஒட்டி வைத்துள்ளார்.
எலெக்ட்ரிக் மரம் அறுக்கும் ரம்மம் மூலம் 3 பேரையும் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு தற்கொலை செய்துள்ளாராம். இந்த ரம்மத்தை கடந்த 19ம் தேதி ஆன்லைன் அமேசன் மூலம் வாங்கி இருக்கின்றனர்.
மேலும், பிரகாஷ் , காயத்திரி போனை ஆய்வு செய்து வருகின்றோம் என்றும் பல்வேறு கோணங்களில் விசாரணை செல்கிறது எனவும், மேலும் கதவு திறந்து உள்ள நிலையில் பக்கத்து வீட்டுகாரர் முதலில் உள்ளே சென்று பார்த்து போலீசுக்குப தகவல் தெரித்துள்ளார். சம்பவம் இரவு 11 அல்லது 12மணியல்வில் நடந்து இருக்கலாம் எனவும் குழந்தைகளுக்கு மயக்க மருந்து கொடுத்துவிட்டே பிரகாஷ் ரம்மத்தால் கழுத்த்தை அறுத்துள்ளார்.
இது தற்கொலை சம்பவமாக இருந்தாலும் கொலை என்ற நோக்கத்திலேயே விசாரனை மேற்கொள்வோம் எனவும் தெரிவித்தார். மேலும், ரூ. 3.5 லட்சம் கடன் வாங்கியதற்காக கடன் பத்திரம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை பல்வேறு கோணத்தில் செல்லும் என தாம்பரம் காவல் கமிஷ்னர் ரவி பேட்டியளித்தார்.























