புதுக்கோட்டை, அக். 28 –
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், ராவுத்தம்பட்டி அடுத்துள்ள கடியாபட்டி என்ற கிராமத்தில் புதியயதாக அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சீரடிசாய்பாபா மற்றும் ஶ்ரீ குபேரலட்சுமி கோயில் குருமஹா சன்னிதானம் நேற்று வடபாதி ஆதீனம் அருட் தலைமையில் நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்டத்தின் முக்கிய தொழில் மற்றும் அரசியல் பிரமுகர்கள் விவசாய பெருமக்கள் என உள்ளூர் மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள் ஏரளமானவர்கள் கலந்துக் கொண்டனர்.