திருவண்ணாமலை பிப்.11-
அதிமுக ஆட்சிகாலத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டப்பட்ட திருவண்ணாமலை மேம்பாலத்தை விரைவில் திறக்காவிட்டால் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி ஆகியோரை கலந்தாலோசித்து அதிமுக சார்பில் விரைவில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என முன்னாள் அமைச்சரும் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு திருவண்ணாமலை நகராட்சிக்குட்பட்ட 2வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் மு.கோகிலாவை ஆதரித்தும் 20வது வார்டில் அதிமுக வேட்பாளர் ஜி.அல்லி குணசேகரனை ஆதரித்தும் தேர்தல் பணிக்குழு அலுவலகத்தை முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ திறந்துவைத்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் திருவண்ணாமலை நகராட்சியில் அதிமுக சார்பில் 39வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் வெற்றிபெறுவது உறுதி எனவே கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் தீவிரமாக தேர்தல் களப்பணியாற்றிட வேண்டும் மேலும் வீடுவீடாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குசேகரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர் அதிமுக ஆட்சிகாலத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலம் இதுவரை திறக்கப்படாமல் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிப்பக்குள்ளாகியுள்ளனர். எனவே விரைவில் மேம்பாலம் திறக்க அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் அதிமுக ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரை கலந்தாலோசித்து விரைவில் அதிமுக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றார்.