திருவள்ளூர், மார்ச். 09 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்

திருவள்ளூர் மாவட்டம், தமிழகத்தில் விளையாட்டு துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலினின் பதவி யேற்ற பிறகுதான் இந்தியாவிற்கே ஒரு முன் மாதிரியாக தமிழகம் விளையாட்டு துறை விளங்கி  வருவதாக ராமநாதபுரம் மாவட்டத்தில் தேசிய அளவில் நடைபெற்ற டென்னிஸ் பால் கிரிக்கெட்டு போட்டியில் பங்கு பெற்ற திருவள்ளூர் மாவட்ட வீரர் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் முகமது சதக்  கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற 34 வது தேசிய அளவிலான டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டியில் 32 மாநிலங்கள் பங்கு பெற்ற நிலையில், தமிழக அணியின் சார்பில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமார் ஆனந்தன், பாரத், சதீஷ், ரோஷினி. ஆகியோர்கள் கலந்து கொண்டு 15 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகம் அணியானது வெற்றி பெற்று  தமிழகத்திற்கும், திருவள்ளூர் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

மேலும் இப்போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட திமுக MLA காதர்பாஷா ( எ) முத்துராமலிங்கம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு  கோப்பை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் அப்போட்டிக் குறித்து  அவ்விளையாட்டுப் போட்டியில் பங்குப்பெற்ற விளையாட்டு வீரர்கள்  ராஜ்குமார் மற்றும் ஆனந்தன் தெரிவிக்கும் போது, கடந்த மாதம் நேபாளத்தில் நடைபெற்ற ஆசியா அளவிலான போட்டியில் கலந்து கொண்டு விளையாடி வெற்றி பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளதாகவும், அதுப்போன்று தற்பொழுது இராமநாதப்புரத்தில் நடைப்பெற்ற தேசிய அளவிலான பால் பந்து கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியில் நல்ல முறையில் விளையாடி தமிழகத்திற்கும், நமது மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதாக அப்போது அவர்கள் தெரிவித்தனர். மேலும் தமிழகத்தில் விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்ற பிறகுதான் இந்தியாவுக்கே ஒரு முன்மாதிரியாக  தமிழகம் விளையாட்டுத் துறை வளர்ந்து வருவதாக பெருமிதம் கொண்டார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here