கும்பகோணம், ஜூலை. 15 –
மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 120 வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் அரசு சார்பிலும் பல்வேறு கட்சியினர் சார்பிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கும்பகோணத்தில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தும், மரியாதை செலுத்தியும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது..
2006 ஆம் ஆண்டு தமிழகத்தின் அப்போதைய முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி காமராஜரின் பிறந்த நாளான ஜூலை 15 யை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தார்.
அது முதல், காமராஜரின் பிறந்த நாளான ஜூலை 15 யை கல்வி வளர்ச்சி நாளாக தமிழக அரசால் கொண்டாடப் பட்டு வருகிறது.
அதனைக் கொண்டாடும் வகையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் கும்பகோணம் பாலக்கரையில் உள்ள காமராஜர் சிலைக்கு சந்திரசேகர மூப்பனார் மாலை அணிவித்து, பள்ளி குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்களையும் மேலும் ஏழை எளியோர்க்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தேர்தல் உயர்மட்டக்குழு உறுப்பினர் ராஜாங்கம் மாவட்டத் தலைவர் சாதிக் அலி மாநகரத் தலைவர் சங்கர், மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் துரைஜெயபால், மாநில நெசவாளர் அணி பொதுச் செயலாளர் செல்வம், வட்டார தலைவர்கள் நடுவக்கரை கிருஷ்ணமூர்த்தி, செல்வராஜ் மழவராயர், மாவட்ட துணைத் தலைவர் சிவா, மாவட்ட இளைஞர் அணி தலைவர் அருண்குமார், மாநகர நிர்வாகிகள் பன்னீர்செல்வம், ராமதாஸ், இளைஞரணி துணைத் தலைவர் ஸ்ரீராம் உள்ளிட்ட நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.






















