திருவண்ணாமலை ஜூலை.21- வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகம் முன்பு திருநங்கைகள் நூதன முறையில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகம் முன்பு திருவண்ணாமலை மாவட்ட திருநங்கைகள் நலச்சங்கம் சார்பில் அதன் சங்க தலைவிகள் பாரதி, ராதிகா தலைமையில் திருநங்கைகள் குடியேறும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் திருநங்கைகளுக்கு அரசு மூலம் வீட்டு மனை பட்டா வழங்குவதுபோல திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 3ம் பாலின நலவாரியத்தில் உறுப்பினராக சேர்ந்துள்ள 156 பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டுமென வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திருநங்கைகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட கோட்டாட்சியர் வீ.வெற்றிவேல், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் (பொறுப்பு) கந்தன் ஆகியோர் நலவாரியத்தில் உறுப்பினராக உள்ளவர்கள் விவரங்களுடன் வீட்டு மனை பட்டா கோரி மனு அளித்தால் உடனடியாக மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனையேற்று போராட்டத்தில் 20க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் அங்கிருந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
முகப்பு மாவட்டம் திருவண்ணாமலை வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி தி.மலை கலெக்டர் அலுவலகம் முன்பு திருநங்கைகள் குடியேறும் போராட்டம்
















