பொன்னேரி, டிச. 28 –

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் இன்று நகராட்சி மன்ற மாதாந்திர கவுன்சிலர்களின் சாதாரண கூட்டம் நகராட்சி வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது.

அக்கூட்டத்திற்கு நகர் மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் தலைமை வகிக்க, நகராட்சி ஆணையர் கோபிநாத், நகராட்சி பொறியாளர் சத்யா, உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.

மேலும் அக்கூட்டத்தில் 15 கவுன்சிலர்கள் கலந்து கொண்டு தங்களது வார்டு பகுதிகளுக்கு தேவைப்படும் குடிநீர் வசதி, மின்விளக்கு, சாலை வசதி, மழைசேத நிவாரணம் உள்ளிட்ட பொருட்கள் குறித்து, விவாதித்தனர்,

முன்னதாக அக்கூட்டத்திற்கு அந்நகராட்சியின் துணைத் தலைவர் உள்ளிட்ட அதிமுக கட்சியின் 9 வார்டு கவுன்சிலர்கள் ஒட்டு மொத்தமாக வராததால் கவுன்சிலர்கள் மத்தியில் கூட்டம் ஆரம்பிக்கும் முன்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இருப்பினும் தொடர்ந்து இன்று வருகைத் தந்த வார்டு உறுப்பினர்களை வைத்து மன்றத்தின் தலைவர் சிறப்பாக வழி நடத்தி அக்கூட்டத்தை பல்வேறு விவதங்களுக்கு பின்பு நிறைவு செய்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here