பாபநாசம், மே. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு…
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகேவுள்ள திருக்கருகாவூர் அருள்மிகு ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை திருகோயில் வைகாசி விசாக பெருவிழாவினை முன்னிட்டு திருத்தேரோட்டம் வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று திருத்தேர் வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
திருக்கருகாவூர் ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை அம்பாள் சமேத முல்லைவனநாதர் திருக்கோயில் வைகாசி விசாக பெருவிழா கடந்த 14- ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் வைகாசி உற்சவ விழாவில் தினசரி சுவாமி அம்பாள் தினந்தோறும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது.
விழாவின் 9-வது நாள் நிகழ்ச்சியாக கட்டுத்தேர் திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது முன்னதாக சுவாமி அம்பாள் சிறப்பு மலர் அலங்காரத்தில் தனித்தனி திருத்தேரில் எழுந்தருள இதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் திருத்தேரினை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்





















